Middle Class - மக்கள் எப்படி பணத்தை சேமிக்க வேண்டும் தெரியுமா.?
(last modified June 19, 2024 a 6:37pm )

Middle Class - மக்கள் எப்படி பணத்தை சேமிக்க வேண்டும் தெரியுமா.?

Punitha - June 19, 2024 | 6:36 pm

சேமிப்பின் அவசியம் பற்றி யாருக்கும் சொல்லி தெரிய வேண்டியதில்லை. அந்த அளவிற்கு சேமிப்பின் அவசியம் பற்றின் நாம் அனைவருமே அறிந்து இருப்போம். ஆனால், எப்படி சேமிக்க வேண்டும் என்பது தான் நம்மில் பலபேருக்கு தெரிவதில்லை. அதிலும் குறிப்பாக மிடில் கிளாஸ் மக்கள்,  எப்படி பணத்தை சேமிக்க வேண்டும் என்று தெரியாமல் இருக்கிறார்கள். எனவே, அவர்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் Middle Class - மக்கள் எப்படி பணத்தை சேமிக்க வேண்டும் என்பதை கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். 

சம்பளத்தில் சேமிப்பு:

முதலில் எந்த அளவிற்கு உங்களால் பணத்தை சேமிக்க முடியுமோ அந்த அளவில் சேமிக்க தொடங்க வேண்டும். போக போக அதிகமாக சேமிக்க பழகலாம். 

எடுத்துக்காட்டாக, நீங்கள் மாதம் 10 ஆயிரம் சம்பளம் வாங்கும் நபராக இருந்தால், அவற்றில் 20% எடுத்து சேமிக்க வேண்டும். சேமிக்க வேண்டும் என்று நினைத்து விட்டால் தேவையற்ற செலவுகளை குறைத்து விட்டு 20% கட்டாயம் சேமிக்க வேண்டும். 

இப்படி உங்களால் தொடர்ந்து 5 அல்லது 6 மாதம் 20% சேமிக்க முடியும் என்றால், அடுத்தப்படியாக அதிக வட்டி அளிக்கும் ஒரு சேமிப்பு திட்டம் ஓபன் செய்து அவற்றில் 20% சேமிப்பை மாதம் மாதம் சேமிக்க வேண்டும். இதன் மூலம் உங்கள்  சேமிப்பு பணத்துடன் வட்டியும் கிடைக்கும். 

வங்கி கணக்கு:

நீங்கள் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்து அதில் சேமிக்க விரும்பினால் அந்த அக்கவுண்டிற்கு gpay போன்ற நெட் பேங்கிங் போன்றவை இல்லாமல் பார்த்து கொள்ளுங்கள். அப்படி இருந்தால் நம்மால் அதிக பணத்தை சேமிக்க முடியும். இவற்றில் மாதம் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையினை செலுத்தி வாருங்கள். 

கடனை அடைத்தல்:

கடன் இருந்தால் நம்மால் கொஞ்சம் கூட சேமிக்க முடியாது. கடனின் வட்டி தொகை நம்முடைய சேமிப்பை கரைத்து விடும். அதனால், நிமிடம் என்னென்ன கடன் இருக்கிறதோ அதனை முதலில் கட்டி முடித்து விட வேண்டும். 

சேமிப்பு திட்டத்தில் சேமிக்க தொடங்கும் முன்பு, நீங்கள் அதிக வட்டியிற்கு வாங்கி இருக்கும் கடனை முதலில் அடைக்க வேண்டும். அதன் பிறகு தான் சேமிப்பு திட்டத்தில் சேமிக்க வேண்டும். 

கடனை அடைத்து முடிக்கும் வரை நம்மால் எந்த அளவிற்கு சிக்கனமாக இருக்க முடியுமோ அந்த அளவிற்கு நாம் வாங்கும் பொருட்களான உடை, உணவு என அனைத்திலும் சிக்கனமாக இருக்க வேண்டும். 

கடனை அடைத்த பிறகு, உங்களுக்கென்று ஒரு சேமிப்பு தொகையை சேமிக்க தொடங்கியதும், உங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி கொள்ளலாம். 

பட்ஜெட் போடுதல்:

குடும்பத்தின் மொத்த வருமானம் எவ்வளவு என்பதை முதலில் கணக்கு செய்ய வேண்டும். இதில் நாம் ஒரு மாதத்திற்கு எவ்வளவு செலவு செய்கிறோம் என்பதையும் கவனிக்க வேண்டும். இப்படி பார்க்கும்போது நாம் வரவிற்கு மீறி செலவு செய்கிறோமா.? இல்லை எதில் நமக்கு செலவு அதிகமாகிறது என்பதை அறிந்து அடுத்த மாதம் அந்த தேவையற்ற செலவை குறைக்க முயலுங்கள். அதன் பிறகு, ஒரு மாதத்திற்கு இவ்வளவு தான் செலவு செய்ய வேண்டும் என்று தனி பணம் பட்ஜெட் போட்டு ஒதுக்கி வைத்து கொள்ளுங்கள். 

வைராக்கியம்:

எடுத்துக்காட்டாக, நீங்கள் வெளியில் சென்று சாப்பிடுகிறீர்கள் என்றால், அதனை நீங்கள் நிறுத்த வேண்டும் என்று ஒரு வைராக்கியம் உங்கள் மனதில் தோன்ற வேண்டும். இத்தனை நாளுக்குள் நான் 20 ஆயிரம் சேமிக்க வேண்டும் என்று வைராக்கியத்தை ஏற்படுத்தி கொள்ளுங்கள். 

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் - மளிகை பொருட்கள் வாங்கும்போது இப்படி கூட பணத்தை சேமிக்க முடியுமா.?

இதுபோன்ற தகவல்களையும் அமேசானின் உடனடி ஆஃபர்களையும் தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் ✔ michampannu.com

எங்களது சமூக வலைத்தளங்களையும் பின் தொடர இந்த லிங்கை கிளிக் செய்யவும் ✔ Facebook, Instagram, Telegram

Request: This post may contain affiliate links. Your purchase through these links earns us a commission at no extra cost to you, helping maintain and expand the site.