மளிகை பொருட்கள் வாங்கும்போது இப்படி கூட பணத்தை சேமிக்க முடியுமா.?
(last modified June 6, 2024 a 7:03pm )

மளிகை பொருட்கள் வாங்கும்போது இப்படி கூட பணத்தை சேமிக்க முடியுமா.?

Punitha - June 6, 2024 | 6:59 pm

அனைவருக்கும் வணக்கம்..! தினமும் பணத்தை மிச்சம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் நம் அனைவருக்குமே வரும். ஆனால், எப்படி மிச்சம் செய்வது என்று குழம்புவோம். அப்படி பணத்தை மிச்சம் செய்யும் விஷயங்களில் மளிகை பொருட்களும் ஒன்று. ஆகவே இன்று நாம் மளிகை பொருட்களில் பணத்தை மிச்சம் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க. 

How to Save Money Buying a Grocery Items in Tamil:

  • முதலில் நல்ல தரமான மளிகை பொருட்கள் குறைந்த விலையில் எங்கே கிடைக்கிறது என்று பார்க்க வேண்டும். 
  • அந்த இடத்தில் கிடைக்கும் மளிகை பொருட்களை 2 அல்லது 3 மாதத்திற்கு தேவையான பொருட்களை மொத்தமாக வாங்கி பாதுகாப்பாக வைத்து பயன்படுத்த வேண்டும். 
  • அடிக்கடி சென்று அருகில் உள்ள கடைகளில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும். 
  • அதுபோல விலையில் கவனமாக இருக்க வேண்டும். பெரும்பாலும் மளிகை கடைகளில் மிளகு, முந்திரி, ஏலக்காய் போன்ற பொருட்களில் நல்ல லாபம் வைத்து விடுவார்கள். எனவே கவனித்து குறைந்த விலையில் வாங்குவது நல்லது. 
  • மளிகைப் பொருட்களை வாங்குவதற்கு முன்பு சிறிது நேரம் செலவழித்து சரியான பட்டியல் தயார் செய்ய வேண்டும். 
  • சமைத்த மற்றும் உடனே சாப்பிட தயாராக இருக்கும் உணவுப் பொருட்களை வாங்குவதை விட, முழு தானியங்களை வாங்கி பயன்படுத்துவது பட்ஜெட்டுக்கு நல்லது.
  • வீட்டில் தயாரிக்க முடிந்த உணவுப் பொருட்களை, வெளியில் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். 
  • ஒவ்வொரு பொருளாக வாங்குவதை விட, தேவையானப் பொருட்களை மொத்தமாக வாங்குவதே சிறந்தது.
  •  பொருட்களை வாங்குவதற்கு கடைக்கு ஒவ்வொரு முறை செல்லும்போதும், கவர்ச்சிகரமான விளம்பர யுக்திகளால் நம்மை அறியாமல் தேவையற்ற பொருட்களையும் வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது.
  • வீட்டிலேயே வளர்த்து பயன்படுத்த முடிந்த காய்கறிகளை நாமே விளைவிப்பது, பணத்தை மிச்சப்படுத்துவதோடு, ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும்.
  • மளிகைப் பொருட்கள் வாங்கும் போது, அவற்றின் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதியை கவனிக்க மறந்து விடாதீர்கள்.

படிக்கும் மாணவர்கள் பணத்தை சேமிக்க சில டிப்ஸ்

இதுபோன்ற தகவல்களையும் அமேசானின் உடனடி ஆஃபர்களையும் தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் ✔ michampannu.com

எங்களது சமூக வலைத்தளங்களையும் பின் தொடர இந்த லிங்கை கிளிக் செய்யவும் ✔ Facebook, Instagram, Telegram

Request: This post may contain affiliate links. Your purchase through these links earns us a commission at no extra cost to you, helping maintain and expand the site.