படிக்கும் மாணவர்கள் பணத்தை சேமிக்க சில டிப்ஸ்
(last modified May 20, 2024 a 5:41pm )

படிக்கும் மாணவர்கள் பணத்தை சேமிக்க சில டிப்ஸ்

Abinaya - May 20, 2024 | 5:41 pm

படிக்கும் மாணவர்கள் பணத்தை சேமிக்க சில டிப்ஸ்..! 

அனைவருக்கும் வணக்கம்..! இன்று நாம் இந்த பதிவின் மூலம் கல்லூரி மாணவர்கள் பணத்தை சேமிப்பதற்கான வழிமுறைகள் பற்றி தான் பார்க்கப்போகின்றோம். பொதுவாக நாம் படிக்கும் காலத்தில் தான் நம் வீட்டில் இருப்பவர்கள் பணம் கொடுப்பார்கள். காரணம் பஸ் செலவிற்கு, சாப்பிட்டு செலவு என்று இருக்கும். அப்போது கொடுக்கும் பணத்தை நாம் சேமித்து வைக்க வேண்டும். அபப்டி சேமிப்பதற்கான டிப்ஸை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

அனாவசிய செலவுகளை தவிருங்கள்:

பொதுவாக நாம் கல்லூரி படிக்கும் போது அனாவசியமாக செலவு செய்வோம். ஆகையால் அப்படி நம் பெற்றோர்கள் நமக்கு கொடுக்கும் பணத்தை அனாவசியமாக செலவு செய்வதை தவிர்க்க வேண்டும். 

ஒரு நாளைக்கு அவர்கள் கொடுக்கும் பணத்தை சேமிப்பு போக மீதியை செலவு செய்ய வேண்டும். அதாவது ஒரு நாளைக்கு இப்போது 100 ரூபாய் கொடுக்கிறார்கள் என்றால், அதில் 50 ரூபாய் எடுத்து சேமித்து விட்டு, மீதியை செலவு செய்யுங்கள். இதுபோல ஒவ்வொரு நாளும் செய்யும் போதும் உங்களாலும் பணத்தை சேமிக்க முடியும்.  

பயன்படுத்திய புத்தகங்களை வாங்கவும்:

நாம் படிக்கும் போது நமக்கு சில Books & Materials தேவைப்படும். அதை நாம் புதிதாக காசு கொடுத்து வாங்குவோம். ஆனால் அதற்கு பதிலாக நீங்கள் ஏற்கனவே உங்களுக்கு முந்தைய ஆண்டு படித்த மாணவர்களிடம் இருந்து புத்தகங்களை வாங்கி கொள்ளலாம். 

இப்படி செய்வதன் மூலம் பணத்தை மிச்சசப்படுத்த முடியும். அதுபோல நீங்கள் படித்து முடித்த புத்தகங்களை உங்களுக்கு அடுத்து வரும் மாணவர்களிடம் கொடுக்கலாம். இதன் மூலமாக உங்களுக்கு ஒரு தொகை கிடைக்கும். 

வீட்டு உணவை உண்ணுங்கள்: 

நீங்கள் தினமும் கல்லூரி கேன்டினில் சாப்பிடுவதை விட வீட்டிலிருந்து உணவு சமைத்து எடுத்து செல்லலாம். இப்படி செய்வதால் பணமும் மிச்சம் ஆகும். உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும். 

பேருந்தை பயன்படுத்துங்கள்: 

இப்போது இருக்கும் காலக்கட்டத்தில் கல்லூரி மாணவர்கள் பலரும் பைக்கில் தான் கல்லூரிகளுக்கு செல்கிறார்கள். இது பார்க்க பேஷனாக இருந்தாலும், இதனால் பெட்ரோலுக்கென்று தனியாக சம்பாதிக்க வேண்டும். 

ஆகையால் கல்லூரிக்கு பைக்கில் செல்வதை விட்டுவிட்டு, பொது போக்குவரத்தை பயன்படுத்தவும். அதாவது பஸ்ஸில் செல்லவும். அதுபோல பஸ்ஸுக்கென்று பஸ்பாஸ் எடுத்து கொள்ளுங்கள். இது உங்களுக்கு உதவியாக இருக்கும். 

Part Time வேலைக்கு செல்லுங்கள்: 

பொதுவாக இப்போது இருக்கும் கல்லூரிகள் எல்லாமே பகுதி நேர கல்லூரிகளாக தான் இருக்கின்றன. அதாவது, காலையில் இருந்து மதியம் வரை அல்லது மதியத்திலிருந்து மாலை வரை என்று பாதி நேரம் தான் இருக்கிறது. 

எனவே நீங்கள் கல்லூரி முடிந்ததும், ஏதாவது Part Time வேலைக்கு செல்லலாம். அதிலிருந்து வரும் பணத்தை உங்களால் சேமிக்க முடியும். அது உங்களுக்கு உதவியாக இருக்கும்.

இதுபோன்ற தகவல்களையும் அமேசானின் உடனடி ஆஃபர்களையும் தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் ✔ michampannu.com

எங்களது சமூக வலைத்தளங்களையும் பின் தொடர இந்த லிங்கை கிளிக் செய்யவும் ✔ Facebook, Instagram, Telegram
 

Request: This post may contain affiliate links. Your purchase through these links earns us a commission at no extra cost to you, helping maintain and expand the site.