மாடி தோட்டம் வைப்பதில் எப்படி பணத்தை மிச்சம் செய்யலாம்..!
(last modified June 7, 2024 a 4:29pm )

மாடி தோட்டம் வைப்பதில் எப்படி பணத்தை மிச்சம் செய்யலாம்..!

Punitha - June 7, 2024 | 4:26 pm

நீங்க மாடித்தோட்டம் வைக்க போறீங்களா அப்போ இந்த பதிவை முழுமையாக படியுங்கள். ஏனென்றால், மாடி தோட்டம் அமைப்பதில் எப்படியெல்லாம் பணத்தை மிச்சம் செய்யலாம் என கூறியுள்ளோம். அதனால் முழுமையாக  இந்த பதிவை பார்த்து பயனடையுங்கள். மாடி தோட்டம் தான் இப்பொழுது உள்ள அனைவருமே பெரிதளவில் விரும்புகிறார்கள். ஆனால் அதனை அமைப்பதற்கு செலவுகள் அதிகம் ஆகும் என பயப்படுகிறார்கள். செலவுகள் அதிகம் இல்லாமல் குறைந்த செலவில் மாடி தோட்டம் அமைக்கலாம். எப்படி என கீழே பார்க்கலாம். 

How to Save Money for Making Terrace Garden in Tamil:

உரங்கள்:

நீங்கள் மாடி தோட்டம் அமைத்து வைத்துள்ளீர்கள் என்றால் சரிதான், ஆனால் அதற்கு நீங்கள் இராசயனம் கலந்த உரங்களை கடையில்  வாங்கி தெளிக்கிறீர்கள் என்றால், அது தவறு. இயற்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் மாடி தோட்டம் வைத்து காய்கறிகளை பராமரிக்கிறோம். மாடி தோட்டத்திலும் இரசாயனம் கலந்த உரங்களை பயன்டுத்தினால், அதற்கு கடைகளிலே வாங்கிடலாமே ? இதனால் உங்களது பணமும் மாதம் மாதம் செலவாகிறது. அதற்கு பதிலாக இயற்கையாக நீங்களே தயாரித்த உரங்களை உங்கள் மாடி தோட்டத்திற்கு பயன்ப்படுத்துங்கள். இதனால் செலவுகளும் குறையும் உங்கள் மாடி தோட்டமும் செழிப்பாக இருக்கும். 

செடிகளுக்கான குரோவ் பேக்ஸ்:

சிலர் மாடி தோட்டத்தில் உள்ள செடிகளை நடுவதற்க்கு  பிளாஸ்டிக் வாலி, பிளாஸ்டிக் பெயிண்ட் வாலி போன்றவற்றை பயன்படுத்துகின்றனர்.குரோவ் பேக்ஸ் வாங்கினால் செலவாகும் என்று.. உண்மையில் பிளாஸ்டிக் வாளிகள் வெயில் மழைகளுக்கு தாக்குபிடிக்காது. விரைவில் உடைந்து விடும். அதற்கு நீங்கள் குரோவ் பேக்ஸ் வாங்கி அதில் செடிகளை நடலாம். குரோவ் பேக்ஸ் குறைந்தது 2 வருடத்திற்கு வரும். இதனால் கடைகளில் பிளாஸ்டிக் வாளிகள் அடிக்கடி வாங்க தேவையில்லை. உங்கள் பணத்தையும் மிச்சம் செய்யலாம். 

பஞ்சகவியம்:

நீங்கள் உங்கள் மாடி தோட்டத்திற்கு பஞ்சவகவிய உரம் வெளியில் கடைகளில் வாங்குவதற்கு பதிலாக முனுசுபாலிடியிலே மக்கிய உரங்கள் ஒரு கிலோ 15 ரூ என விற்கப்படுகிறது. அதனை நீங்கள் வாங்கி பயன்படுத்தலாம். கடையில் வாங்கும் பஞ்சவகாவிய உரங்களை விட இந்த உரங்கள் வாங்குவதால் பணத்தையும் மிச்சம் செய்யலாம். செடிகளும் நன்றாக வளரும். 

மாடிதோட்ட பந்தல்:

சிலர் மாடி தோட்டத்தில் உள்ள கொடிகளுக்காக பந்தல் போட பிளாஸ்டிக் மற்றும் இரும்பு பைப்புகளை கடையில் வாங்குகிறார்கள். அதற்கு பதிலாக மூங்கில் கம்புகள் போன்றவற்றை பந்தல் போட பயன்ப்படுத்தலாம். இதனால் செலவுகளும் குறைவுதான். 

வாட்டர் டிரே:

நீங்கள் கீரைகள் மற்றும் சிறிய அளவில் உள்ள செடிகளை நட வாட்டர் டிரே வாங்குகிறீர்கள் என்றால். அதனை இரண்டாக கட் செய்து பயன்படுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் இரண்டு வாட்டர்டிரே வாங்குவதற்கு பதிலாக இப்படி செய்வதனால் பணத்தை மிச்சப் படுத்த முடியும். 

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் - மளிகை பொருட்கள் வாங்கும்போது இப்படி கூட பணத்தை சேமிக்க முடியுமா.?

இதுபோன்ற தகவல்களையும் அமேசானின் உடனடி ஆஃபர்களையும் தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் ✔ michampannu.com

எங்களது சமூக வலைத்தளங்களையும் பின் தொடர இந்த லிங்கை கிளிக் செய்யவும் ✔ Facebook, Instagram, Telegram

Request: This post may contain affiliate links. Your purchase through these links earns us a commission at no extra cost to you, helping maintain and expand the site.