ஹோட்டல் வைப்பதில் பணத்தை மிச்சம் செய்வது எப்படி
(last modified June 24, 2024 a 5:23pm )

ஹோட்டல் வைப்பதில் பணத்தை மிச்சம் செய்வது எப்படி

Indumathi - June 24, 2024 | 5:10 pm

வளர்ந்து வரும் காலகட்டத்தில் நம் கையில் ஏதாவது ஒரு தொழில் இருந்தால்தான் நம்மால் வாழ்க்கையை ஓட்ட முடியும். அந்தளவில் விலைவாசி அதிகரித்து கொண்டே செல்கிறது. அதனால் நாம் சொந்தமாக ஒரு தொழில் தொடங்கினால் அதை வைத்து  அடுத்து அடுத்த முன்னேற்றத்திற்கு கொண்டு போகலாம். அதற்கு முதலில் நாம் சிறியளவில் தொழிலை தொடங்க வேண்டும். இங்கு தொழில் தொடங்க அனைவரும் பயப்படும் காரணமே அதனால் உண்டாகும் செலவை நினைத்து தான். அதனால் இந்த பதிவில் ஒரு ஹோட்டல் வைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் எப்படி பணத்தை மிச்சம் செய்யலாம் என தெரிந்து கொள்ளுங்கள். 

கடை வைக்கும் இடம் 

நீங்கள் சிட்டியில் ஹோட்டல் வைக்க நினைத்தால் அது அதிக செலவு உண்டாகும். அதே நீங்கள் உங்கள்  கிராமத்தில் கொஞ்சம் ரோட்டோரத்தில் வைத்தால் சிட்டியில் கடை வைக்கும் செலவு ஆகாது. அதே சமயம் வியாபாரமும் நன்றாக இருக்கும். 

சமைக்கும் பொருளில் பணத்தை மிச்சம் செய்வது எப்படி ? 

உங்கள் ஹோட்டலில் வித விதமாக சமைக்க நினைத்து அது சரியாக வியாபாரம் ஆகாமல் நஷ்டமாவதை விட மக்கள் அதிகம் விரும்ப கூடிய சுழியம், கார போண்டா, கீரை வடை இதுபோன்ற மக்கள் வீட்டில் செய்ய நினைக்கும் பொருள்களை வியாபாரம் செய்வது இன்னும் சிறந்தது. இதனால் நீங்கள் அதிக இலாபம் காணலாம். 

வேலையாட்கள் 

நீங்கள் வேலையாட்களுக்கு சம்பளம் குடுக்க பயந்து குறைந்த சம்பளத்திற்கு வேலையாட்களை சமைக்க வைக்காதீர்கள். சம்பளம் அதிகம் கொடுத்தாலும் நன்றாக சமைக்க தெரிந்த நபர்களையே வேலைக்கு வைத்துக்கொள்ளுங்கள்.  அப்போதுதான் வாடிக்கையாளர்கள் அதிகம் வருவார்கள். சமைக்க தெரியாதவர்களை வேலைக்கு வைத்து நஷ்டம் அடைவதற்கு இப்படி செய்வது சிறந்தது. 

காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் வாங்குவதில் பணத்தை மிச்சம் செய்வது எப்படி ?

உங்கள் ஹோட்டல் முதலில் ஒரு சிரியளவிலே தொடங்கி இருப்பீர்கள். அதனால் அதற்கு ஏற்றார் போலவே காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை வாங்கி கொள்ளுங்கள். காய்கறிகள் அதிகம் வாங்கி அது அழுகி போவதை விட தேவையான அளவு அவ்வப்போது வாங்கி கொள்வதால் பணத்தை மிச்சம் செய்ய முடியும். 

வாடிக்கையாளர்கள் உங்கள் ஹோட்டலில்  எந்த உணவை  விரும்புகிறார்கள் என்று அறிந்து அதற்கேற்றாற் போல் வியாபாரம் செய்தால் நிறைய வாடிக்கையாளர்களை உங்களால் ஈர்க்க முடியும். இதனால் அதிக  காணப்படும். வாடிக்கையாளர்களுக்கு பிடிக்காத உணவை செய்து வீணாடிப்பதைவிட இப்படி செய்தால் உங்கள் பணத்தையும் மிச்சம் செய்யலாம், வாடிக்கையாளரையும் அதிகரிக்க முடியும். 

இதையும் தெரிந்துகொள்ளுங்கள்- மாடி தோட்டம் வைப்பதில் எப்படி பணத்தை மிச்சம் செய்யலாம்..!

இதுபோன்ற தகவல்களையும் அமேசானின் உடனடி ஆஃபர்களையும் தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் ✔ michampannu.com

எங்களது சமூக வலைத்தளங்களையும் பின் தொடர இந்த லிங்கை கிளிக் செய்யவும் ✔ Facebook, Instagram,

Request: This post may contain affiliate links. Your purchase through these links earns us a commission at no extra cost to you, helping maintain and expand the site.